இயேசு கிறிஸ்து தம்மை பின்பற்றுகிற ஜனங்களுக்கும், இராமுழுதும் ஜெபித்து தம்மால் தெரிந்து கொள்ளப்பட்ட சீஷர்களுக்கும் வேதபாரகரையும் பரிசேயரையும் மையப்படுத்தி சொன்னது “அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்.” இயேசு கிறிஸ்து தம்மிடத்தில் வருகிற விபச்சார ஸ்திரீயை பார்த்து, அவர் ஆக்கினை தீர்ப்பு வழங்குவதற்கு ஏதுவாயிருந்தாலும் நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாக தீர்ப்பதில்லை. நீ போ, இனி பாவம் செய்யாதே என்றார். (யோவான் 8:11) ஆனால் அவர் வேதபாரகருக்கும் பரிசேயருக்கும் ஐயோ! என்று கூற காரணம் அவர்களின் மாய்மால வாழ்க்கையே காரணம். அப்படி அவர்கள் வாழ்விலே காணப்பட்ட மாய்மாலம் தான் என்ன?
1. மத்தேயு 23:3 அவர்கள் சொல்லுகிறார்கள் சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்
அவர்கள் மோசேயின் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். ஜனங்களுக்கு போதிக்கத்தக்க அதிகாரத்தை உடையவராய் இருக்கிறார்கள். இருந்தபோதிலும் அவர்கள் தங்கள் வாழ்விலே அதை கைக்கொள்ள முயற்சிப்பதில்லை அதை கைக்கொண்டு தவறும் போதும் தேவனிடம் கிருபையை கேட்கவும் அவர்களுக்கு மனதில்லை. நம்முடைய வாழ்விலே வேத வசனத்திற்கும், நம் வாழ்விற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? இல்லை, பிறருக்கு சொல்வதில் மாத்திரம் திருப்தி அடைகிறோமா? நம்மை நாமே ஆராய்ந்து தேவனிடத்திலே திரும்பக்கடவோம்.
2. அவர்கள் தங்கள் கிரியைகளை மனுஷருக்கு காண்பித்தார்கள்
அவர்கள் தங்கள் கிரியைகளை மனுஷர் காணவேண்டும் என்று பார்வைக்கு நீண்ட நேரம் ஜெபம் பண்ணுகிறவர்களாய் தங்களை காண்பித்தார்கள். அவர்களின் வெளிப்புறம் மனுஷர்களின் பார்வைக்கு ஏற்றதாயிருந்தாலும் அவர்களின் இருதயமோ கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருந்தது என்று இயேசு கிறிஸ்து மத்தேயு 23:26 இல் கண்டிக்கிறார். நாமும் சற்று நம்முடைய வெளிப்புறத்தையும் உட்புறத்தையும் சற்று ஆராய்வோமா! நம்முடைய உட்புறம் செம்மையாயிறாவிடில் தேவனிடத்தில் நமக்கு பங்கு இல்லை.
3. மனுஷரால் வரும் மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்.
அவர்கள் வாழ்விலே தேவனால் வரும் மகிமையை காட்டிலும் மனுஷரால் வரும் மகிமையை அதிகமாய் விரும்பினார்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், வந்தனங்களையும், ரபீ என்று அழைக்கப்படுவதையும் விரும்பினார்கள். எல்லா மக்களுக்கும் முன்பாக தங்களை முதன்மையானவர்களாகவும், முக்கியம் வாய்ந்த நபர்களாகவும் தங்களை காண்பித்தனர். ஆனால் இப்படிப்பட்ட மேன்மை நமக்கு பரத்திலிருந்து மாத்திரம் வரவேண்டுமே தவிர, பிறரிடத்தில் நாம் எதிர்பார்ப்பது மனுஷரால் வருகிற மகிமையை ஏற்றுக் கொள்கிற இடத்தில் நம்மை தள்ளிவிடும். லூக்கா 18-வது அதிகாரத்தில் மனுஷரால் வரும் மகிமையை ஏற்றுக்கொண்ட பரிசேயனின் ஜெபம் ஏற்றுக்கொள்ளப்படாமல், தேவனால் வருகிற மகிமையை ஏற்றுக்கொண்டவனே நீதிமானாக்கப்பட்டவனாய் தன் வீட்டுக்கு திரும்பி போனான்.
In English
Jesus Christ said to His followers and to His chosen disciples—who prayed all night—that they should not follow the example of the Bible teachers and Pharisees: “Do not do as they do.” When Jesus saw the adulterous woman coming to Him, He said, “Even if I were to condemn, I do not condemn you either. Go and sin no more” (John 8:11).However, the reason He said, “Woe to the Bible teachers and Pharisees!” was because of their hypocritical lives. So, what was the hypocrisy in their lives?
1. Matthew 23:3 — “They say, but do not do.They sit in Moses’ seat and have authority to teach the people.” However, they do not try to follow it in their own lives, and even when they do try and fail, they are unwilling to ask God for mercy. Is there a connection between the Scriptures and our own lives? Are we satisfied with merely telling others what to do? Let us examine ourselves and return to God.
2. They displayed their works before men.They presented themselves as people who prayed for long periods in public so that others would see and admire them. In Matthew 23:26, Jesus Christ condemns this, saying that although their outward appearance was pleasing to the eyes of men, their hearts were full of robbery and iniquity. Let us examine both our outward appearance and our inner life. If our inner being is not pure, we have no part in God.
3. They loved the glory that comes from men more.In their lives, they valued the glory that comes from men more than the glory that comes from God. They loved the most important places at feasts, the best seats in the synagogues, and greetings in the marketplaces—especially being called “Rabbi.” They presented themselves as the first and most important among the people. But true greatness should come only from heaven. When we seek the approval of others, we risk accepting glory from men instead of God. In Luke chapter 18, the prayer of the Pharisee—who sought the glory of men—was not accepted. But the one who sought the glory that comes from God returned to his house justified.